Wed06192013

Last update07:24:41 PM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back You are here: Home செய்திகள் பிரமாதம் றஊப் ஹக்கீம் !

பிரமாதம் றஊப் ஹக்கீம் !

Marzookகிழக்கு மாகாண சபைத்ததேர்தலுக்கான நியமனப் பத்திரம் தாக்கல் செய்வதற்கான இறுதி நேரத்திலே தரமான முடிவு எடுத்தீர்கள். அரசாங்கத்தோடு சேர்ந்து தேர்தலில் நிற்பதில்லை தனியே மரச்சின்னத்திலே கேட்பது என்ற முடிவு எடுத்தீர்கள். இதனால் கிழக்கிலே முஸ்லிம்கள் மத்தியிலே உங்களை நோக்கி ஒரு எழுச்சி ஏறபட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது இந்த சமூகத்தைக் காப்பாற்றுவதற்கு யாரும் இல்லையா? என்று தத்தழித்த சமூகத்திற்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று தேன்றியுள்ளது. கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் மாத்திரமல்ல தெற்குமுஸ்லிம்கள் மத்தியிலும் இந்த மாற்றதினைக் காணக் கூடியதாக இருக்கிறது.

முஸ்லிம் முதலமைச்சர் இல்லை என்றபோது அரசாங்கத்திலிருந்து பிரிந்தீரகள். நாங்கள் அரசாங்கத்தோடு சேர்ந்து கேட்கின்றபோது முஸ்லிம் முதலமைச்சர் எங்களுக்கு உறுதிபடுத்தப்பட வேண்டும். ஏன் என்றால் அரசாங்கம் வென்ற பின் தமிழ் முதலமைசர் ஒருவரை அரசாங்கம் நியமிக்குமானதாக இருந்தால் அந்த தமிழ் முதலமைச்சரால் முஸ்லிம்களுக்கு எந்த பலனும் இல்லை. ஏன் எனின் அவர் தன்னுடைய வெற்றிக்கு முஸ்லிம்களின் பங்கும் உள்ளது என்பதை உணரமாட்டார். தான் அரசாங்கத்தினால் நியமிக்கப்ட்டவன் என்ற மமதையில் இருப்பார். முஸ்லிம்கள் விவகாரத்தை அரசாங்கம் பார்த்துக்கொள்ளட்டும் என்று முஸ்லிம்களை கண்டுகொள்ளாமல் இருப்பார்.

ஆனால் தமிழ் கூட்டமைப்பினரோடு இணைந்து மாகாணசபையில் ஆட்சியை பிடிக்கின்ற போது முஸ்லிம் முதலமைச்சரை விட்டுக்கொடுக்கலாம். வருகின்ற தமிழ் முதலமைச்சர் தன்னுடைய வெற்றிக்கு முஸ்லிம்களின் பங்பகளிப்பு கணிசமாக இருந்தது என்ற நன்றி உணர்வோடு முஸ்லிம்களின் நலனை அதிக சிரத்தை எடுத்து செயற்படுவார்.

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம், தமிழ், சிங்களவர்கள் அனைவரும் றஊப் ஹக்கீம் ஆகிய நீங்கள் இந்த கிழக்கு மாகாணசபை தேர்தலிலே என்ன முடிவு எடுக்க போகின்றீர்கள் என ஆவலுடன் எதிர்பாத்திருந்தனர். ஆனால் இந்த மக்கள் சகோதரர் ஹிஸ்புள்ளாவோ அல்லது அமைச்சர் அதாவுல்லாவோ என்ன முடிவு எடுக்க போகின்றார்கள் என கொஞ்சமும் அக்கறை எடுக்கவில்லை. ஏன் என்றால் நீங்கள் முஸ்லிம் சமூகத்தின் தலைவர். சமூகம் சார்ந்து முடிவெடுக்க கூடியவர். ஊங்களுக்குதான் இரண்டு தெரிவுகள் (two options) இருந்தன.

  • அரசாங்கத்தோடு சேர்ந்து தேர்தலில் நிற்பது.
  • அரசாங்கத்தைவிட்டு பிரிந்து தனித்து தேர்தலிலே நிற்பது.

இந்த இரண்டு தெரிவுகளில் எதனை நீங்கள் தெரிவுசெய்வீர்கள் என இந்த நாடே எதிர்பார்த்திருந்தது. ஆனால் சகோதரர் ஹிஸ்புள்ளாவுக்கோ அமைச்சர் அதாவுள்ளாவுக்கோ இருந்தது ஒரே ஒரு தெரிவு தான். அதாவது அரசாங்கத்தோடு சேர்ந்து கேட்பது என்ற ஒரே ஒரு தெரிவு தான் இருந்தது. அரசாங்கத்தை விட்டு பிரிந்து கேட்பது என்ற தெரிவு அவர்களுக்கு இருக்கவில்லை. அரசாங்கத்தை விட்டு பிரிந்து கேட்கும் அளவுக்கு அவர்களுக்கு சமூகத்தின் பால் அக்கறை இருந்ததில்லை.

றஊப் ஹக்கீம் அவர்களே!

தம்புள்ளை பள்ளிவாசல் சாதுக்களால் சேதமாக்கப்பட்டபோது நீங்கள் கொதித்தெழுந்து சமூகத்தின் பால் குரல் கொடுத்தீர்கள். அப்போதே முஸ்லிம் சமூகத்தில் உங்களுக்கு சரிவடைந்திருந்த செல்வாக்கு மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்தது. அது இப்போது கிழக்கு மாகாணசபை தேர்தலிலே நீங்கள் எடுத்த முடிவின் காரணமாக பலமடங்கு செல்வாக்கு உங்களுக்கு அதிகரித்துள்ளது. ஆனால் சகோதரர் ஹிஸ்புள்ளா தம்புள்ள பள்ளிவாயில் பிரச்சிணையில் பள்ளிவாயில் எந்தவிதமான சேதத்திற்குள்ளாகவில்லை என அறிக்கைவிட்டார். அவருடைய பேட்டியை ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு தடவை தம்புள்ள ரங்கிரிய வானொலியில் தொடர்ச்சியாக ஒலிபரப்பிக்கொண்டே இருந்தார்கள். இதனால் தம்புள்ளையிலுள்ள நமது முஸ்லிம்கள் வெட்கி தலை குனிந்தார்கள். சகோதரர் ஹிஸ்புள்ளா இதில் தான் ஒரு அரசாங்கத்தின் எடுபிடிதான் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

நீங்கள் இந்த தேர்தலிலே அரசாங்கத்தோடு இணைந்து நின்றிருந்தால் தேர்தல் முடிவடைந்த பின் எங்களுக்கு முதலமைச்சர் தருவதில் அரசாங்கம் ஒரு இழுபறி நிலையை உருவாக்கி இருக்கும். சென்ற முறையும் அரசாங்கம் சகோதரர் ஹிஸ்புள்ளாவுக்கு முதலமைச்சர் பதவி தருவதாக உறுதியளித்து விட்டு தேர்தல் முடிந்ததும் இவ்வாறான இழுபறி நிலையை அரசாங்கம் உருவாக்கியது. ஏறக்குறைய ஒரு வாரமாக ஹிஸ்புள்ளாவா? பிள்ளையானா? முதலமைச்சர் என்ற இழுபறி நடந்தது.

இந்த இழுபறி நடந்த ஒரு வாரத்திலே மகாராஜா நிறுவனத்தின் தொலைகாட்சிகளிலே ஒரு கேலிச்சித்திரம் ஒளிபரப்பினார்கள். அதிலே ஹிஸ்புள்ளாவும் பிள்ளையானும் ஜம்பர் போட்டுக்கொண்டு தவழ்ந்து கொண்டு ஒரு ஓட்ட போட்டியிலே ஓடுவது போன்று தவழ்கிறார்கள். அதவாது முதலமைச்சருக்கான ஓட்ட போட்டி அது. இதிலே எவர் ஜெயிப்பார் என்பது தான் அந்த கேலிச்சித்திரம். இறுதியிலே யார் ஜெயித்தார்கள் என்பதை இந்த உலகமே அறியும்.

கொழும்பிலே முக்கியமான சந்திகளிலே இந்த கேலிச்சித்திரத்தை வரைந்து (News first) வரைந்து கட்டவுட்களாக நிறுத்தியிருந்தார்கள். இதை ஏன் இப்போது ஞாபகப்படுத்துகிறேன் என்றால் நீங்கள் அரசாங்கத்தோடு இணைந்து தேர்தலிலே நின்றிருந்தால் தேர்தலின் பின்னர் இந்த நிலைமையே தோன்றியிருக்கும். மகாராஜா நிறுவனமும் உங்களுக்கு ஜம்பர் அனுவித்து ஓட்ட பந்தையத்துக்கு அனுப்பியிருப்பார்கள். நீங்கள் எங்களுடைய சமூக தலைவன். நீங்கள் ஜம்பர் அணியலாமா? ஹிஸ்புள்ளா வேண்டுமானால் ஜம்பர் அணியலாம். ஹிஸ்புள்ளாவுக்கு அது சரி. உங்களுக்கு அது சரியில்லை.

றஊப் ஹக்கீம் அவர்களே!

இறுதிவரைக்கும் அரசாங்கத்தோடு இணைந்துதான் தேர்தலிலே நிற்க வேண்டும் என போராடினீர்கள். அந்த போராட்டத்திலும் உங்களுடைய சாணக்கியம் எங்களுக்கு விளங்கியது. இறுதியிலே தனித்து கேட்பது என தீர்மானித்தீர்கள். அதிலேயும் உங்கள் சாணக்கியம் எங்களுக்கு விளங்கயது.

எனவே சமூக நலனில் மாத்திரம் அக்கறை கொண்டு போராடுங்கள். இந்தசமூகம் உங்கள் பின்னால் ஒற்றுமை படும். இவ்வாறு செயற்படுவதால் உங்களுக்கு கட்சியிலே சில தடைகளை சிலர் ஏற்படுத்துவார்கள் என்பதை எனக்கு தெரியும். எட்டு வருடங்கள் உங்களோடு சேர்ந்து அரசியல் செய்த காரணத்தினால் உங்களுக்கு கட்சியிலே உள்ள உள்ளகத்தடைகளை நான் அறிவேன். எனவே இதனை முறியடித்து முன்னே செல்லுங்கள். சமூகத்தை நல்ல வழியில் இழுத்துச் செல்லுங்கள்.


எனவே கிழக்கு மாகாணசபை தேர்தல் முடிவடைந்து முதலமைச்சரை தெரிவு செய்ய சில தினங்கள் எடுக்கும் அந்த இடைப்பட்ட தினங்களில் (ஜம்பரோடு ஓடும் தினங்கள்) மீண்டும் ஒரு மடலின் மூலம் உங்களை சந்திக்கும் வரை விடைபெறுகினிறேன். அல்லாஹ் நாம் செய்கின்ற நன்மையான காரிங்களை பொருந்திக்கொள்வானாக ! ஆமீன்.


இவ்வண்ணம்

....................................
மர்சூக் அஹமட் லெப்பை

பிரதி

1. கௌரவ MTM. ஹசன் அலி MP, செயளாலர் நாயம், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

2. கௌரவ பசீர் சேகுதாவூத் MP, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

3. இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும்.