ரம்மியம் சுமந்து வரும் ரமளான் மாதம்
- Details
- Published on Friday, 20 July 2012 16:11
-மதியன்பன்-
ஒவ்வொரு மாதமும்
வானத்தில்
வளர்பிறை வருகிறது
ஆனால்
ரமளான் மாதத்தின் தலைப்பிறை
ஒரு
ரம்யத்தை சுமந்து வருகிறது.
ரமளான்
வானுக்கு வரும் வளைந்த வில்
இந்த மானுடத்திற்கு
பல அம்புகளை
பாய்ச்சப் போகிறது.
நன்மைகளை பீய்ச்சப்போகிறது.
ரமளான் மாதம்
நம்மிடத்தில்
விருந்தாளியாய் வருகிறது
விருந்தாளிகள் விடைபெறுமுன்
விருப்பமுடன் கவனிக்கவேண்டும்.
ரமளான் மாதம்
பிரிவதற்கு முன்னால்
பாவங்களையெல்லாம்
எரித்துவிட்டு
போகப் போகிறது
ரமளான் மாதம்
வணக்கத்தை மட்டும்
நமக்கு
வரையறுத்துச் சொல்ல வரவில்லை
மாறாக
ஏராளமான பாடங்களை
எத்திவைக்க வருகிறது.
பாடங்கள்
படிப்பதற்கு மட்டுமல்ல
வாழ்க்கைக்கு
வழித்துணையாக வரவேண்டும்.
ரமளான் பிறையைப் பலர்
தங்களது
வாழ்க்கைத் துணையாய்
வரவேற்றுக் கொள்வார்கள்.
இன்னும் சிலர்
கூடாரமடித்து அதனோடு
குடியமர்ந்து கொள்வார்கள்.
அதனால்
இந்த மாதம்
மாதங்களில் மகாராணியாகிறது.
சிறப்புக்களில் சிகரமாகிறது.
கல்நெஞ்சங்களையும்
இந்தமாதம் கரையவைக்கப்போகிறது.
மனித மனங்களை
மாற்றிடுவேன் என்று
சவால்விட்டு வந்த
சாத்தான்களுக்கு
விலங்கிடப்பட்ட
வித்தியாசமான மாதமிது
அனல் தெறிக்கும்
அகோரத்திலும்
நல்ல உள்ளங்களை
நனையவைத்து குளிர வைத்து
நாவுக்கு சுவையூட்டும்
நட்புக்குரிய மாதமிது
இல்லாத ஏழைகளும்
இருப்பதைக் கொண்டு
இளைப்பாறும்
இனிய மாதமிது
இரவைப் பகலாக்கி
இறையை வணங்க வைத்தது
பிரிந்திருந்த
இரத்த உறவுகளை
இணங்கவைக்கும்
இனியமாதமிது.
மலைபோல் குவிந்திருந்த
மானுடத்தின்
பாவமூட்டைகள்
ரமளான் மாதத்தின் வருகையால்
பகலவன் கண்ட
பனித்துளிகளாய்
பறந்து போகப்போகிறது.
இந்த மாதத்தில் ஓரிரவு
ஒளிந்திருக்கிறது
அது
புனிதத்தைப் போர்த்திக் கொண்டதால்
லைலத்துல் கத்ர் எனும்
;ரகசியத்தை
சூசகமாய்ச்
சொல்லி நிற்கிறது.
ஈமானிய இதயங்களின்
உடலுக்கும் உளத்திற்கும்
ஒத்தடம் போடும்
ஒப்பற்ற மாதமிது
இந்த மாதத்தின்
நாட்களின் நகர்வுகள்
நமக்கு
நரகத்தை தூரமாக்கும்
சுவர்க்கத்தை
சொந்தமாக்கும்
வானத்திலுள்ள
விண்மீன்கள் மட்டுமல்ல
நமது வீட்டிலுள்ள
ஆனத்து மீன்கள் கூட
ஆமீன் சொல்லும்
அற்புத மாதமிது
இந்த ரமளானில்
வரவேண்டும் மாற்றம்
நாமும் நமது சமூகமும்
காணவேண்டும் ஏற்றம்
அந்த "வார்த்தை"...!
- Details
- Published on Monday, 16 July 2012 20:23
-நிலாக்கவி-
நாலாண்டுக்குமுதல்
நாளும் பொழுதும்
ஆளாளுக்கு உச்சரித்த
"அரசியல்" வார்த்தை! - மீண்டும்
உம்மாவுக்கொரு கவிதை
- Details
- Published on Tuesday, 12 June 2012 12:33
இதய அறைகளிலே
இதமாய் உறைந்திருக்கும்
ஈரம் கசிகின்ற ஊரின்
உணர்வு என்னை
உசுப்பேத்தி விடும்போது
இதயம் அமைதிபெற
உனக்கொரு கவிதை உம்மா!
செல்லும் இடமெல்லாம்
சிறப்பைக் கொண்டுவரும்
சீர் கல்விச் சிறப்புகளை
அடைந்திட அடியேனின்
வாழ்நாள் முழுவதையும்
வாரி வழங்குதற்கு
நீ தந்த பாசத்தை
நானும் அறிவேன் உம்மா!
கறுப்புப் பிரபஞ்சம்
- Details
- Published on Sunday, 24 June 2012 00:43
-ஏ.ஜி.எம். ஸதக்கா-
பிபஞ்சமெங்கும் யாரோ வேதம்
படித்தனர்
அமைதி –
மயானம் தோற்கும் அமைதி
கறுப்பு பார்வைகள் பளபளத்தன
இருண்ட நிஜத்தில் எல்லோரும்
இயல்பாய் இருந்தனர்
முட்டைக்கரு
- Details
- Published on Tuesday, 12 June 2012 12:29
காத்தநகர் முகைதீன்சாலி
நாம்
முட்டைக்குள் கருவானவர்கள்
இருந்தாலும்
இரு வேறு நிறமானவர்கள்
நம்மை
வேகவைத்து
பிரிப்பது சுலபம்
ஈரம்தான்
நம் இணைப்பின் பலம்.
நாம்
ஒரு கூட்டுக்கிளியானவர்கள்
காத்தநகர் முகைதீன்சாலி